தன்னை செல்லமாக வளர்த்தவரைக் காப்பாற்ற பாம்புடன் போராடிய நாய்க்கு நேர்ந்த பரிதாபம்!!

396

இந்தியாவில்..

இந்தியாவில், தன்னை செல்லமாக வளர்த்தவரைக் காப்பாற்றுவதற்காக நாய் ஒன்று பாம்பு ஒன்றுடன் போராடியது. அமித் ராய் என்பவர் நாய்கள் மீது மிகுந்த பிரியம் கொண்டவர். அவர் வளர்ந்த நாய்களில் கப்பார் என்று அழைக்கப்படும் நாயும் ஒன்று.

இந்த கப்பார், அமித் மீது மிகுந்த பாசம் கொண்டதாம், அதே நேரத்தில், தன் அனுமதி இல்லாமல் அமித்தை யாரும் நெருங்கவும் விடாதாம் கப்பார். இப்படிப்பட்ட சூழலில், நேற்று, அமித் தன் நாயான கப்பாருடன் வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது, ஒரு பெரிய விஷப்பாம்பு அமித்தை நோக்கி வந்திருக்கிறது.

அதை அமித் கவனிக்காவிட்டாலும், கப்பார் அந்த பாம்பை கவனித்துவிட்டது. அந்த பாம்பு தன் உரிமையாளரை நோக்கி வருவதைக் கண்ட கப்பார், ஓடோடிச் சென்று அந்த பாம்புடன் சண்டையிட்டுள்ளது. நீண்ட நேர சண்டைக்குப் பின் இறுதியில் அந்தப் பாம்பை கடித்து இரண்டு துண்டுகளாக்கிவிட்டது கப்பார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, கப்பாரின் உடலில் பாம்பின் விஷம் பரவ, கீழே விழுந்து தன் உயிரை விட்டுவிட்டது கப்பார். தனக்காக உயிரையே விட்ட கப்பாருக்காக, அமீத்தும் அவரது குடும்பத்தினரும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.