சென்னை குண்டு வெடிப்பில் பொலிஸார் வலைவீசித் தேடியவர் ஒரு அப்பாவி!!

677

Chennai

சென்னை சென்ட்ரல் ரயில் குண்டு வெடிப்பு விசாரணையில் சிபிசிஐடி பொலிஸாரால் சந்தேகிக்கப்படும் நபர் என்று அறிவிக்கப்பட்டவர் அப்பாவி என்பது தெரியவந்துள்ளது.

குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிப்பதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கமராக்களை சிபிசிஐடி பொலிஸார் ஆய்வு செய்தபோது, குண்டு வெடிப்பதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் வழுக்கை தலை நபர் ஒருவர் வேகமாக ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.

இவர் மீது சந்தேகம் இருப்பதாக சிபிசிஐடி ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார். விசாரணைக்குப்பின் ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, கமராவில் சிக்கிய சந்தேகநபர் யார் என்பதை உறுதி செய்துவிட்டோம். கேரளத்தை சேர்ந்த அவரது பெயர் உள்ளிட்ட மற்ற விவரங்களை வெளியிட விரும்பவில்லை. குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றார்.