குழந்தையே பிறக்காது என்ற பெண்ணுக்கு 11வது மாதத்தில் 1ம் திகதியில் பிறந்த 11வது குழந்தை!!

517


ஐரோப்பாவில்..ஐரோப்பாவில் இளம் பெண் ஒருவர் கர்ப்பம் தறித்த 11வது மாதத்தில் 11-ந் திகதியில் அவரது 11வது குழந்தையை பெற்று எடுத்து இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பாவின் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சது நார்ட்லிங் என்ற பெண்மணி தனது 21வது வயதில் முதல் முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஆனால் சது நார்ட்லிங்கின் கருப்பையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரது முதல் கர்ப்பம் கலைந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அவருக்கு இருந்த அதிகமான மன அழுத்தம் காரணமாக அவரது உடல் கருமுட்டையை வெளியேற்றும் திறனை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனால் அவருக்கு குழந்தைகளே பெற்றுக் கொள்ள முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையே பிறக்காது என மருத்துவர்களால் கூறப்பட்ட சது நார்ட்லிங், தற்போது தனது 11வது குழந்தையை அதிசயமான முறையில் பெற்றெடுத்துள்ளார்.

பெரும்பாலும் பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கும் அதிகபட்ச காலம் 10 மாதங்கள் என்பது அனைவரும் அறிந்தது, சில சமயம் அது குறைவான மாதத்தில் நிகழ்வதும் உண்டு, ஆனால் சது நார்ட்லிங் கர்ப்பமாகி 11வது மாதத்தில் தனது குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.


ஏற்கனவே 10 குழந்தைகளுக்கு தாயான சது நார்ட்லிங், கர்ப்பமான 11வது மாதத்தில் 11ம் திகதியில் 11வது குழந்தையை பெற்றெடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

சது நார்ட்லிங்-க்கு 11ல் என்ன ராசியோ தெரியவில்லை அவரது 11வது குழந்தை 11 என்ற இலக்கங்களில் பிறந்துள்ளது. சது நார்ட்லிங்-க்கு 2008ம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.