வரி எய்ப்பு வழக்கில் முன்னாள் துணை ஆணையருக்கு 1198 கோடி அபராதம், 102 ஆண்டுகள் சிறை!!

424

Court

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முன்னாள் துணை ஆணையர் ஜி.எஸ் ஜயதிலக்கவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று 102 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வரி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்ட பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் குற்றத்திற்கு 102 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டாலும், அவர் சிறையில் இருக்க வேண்டிய காலங்கள் 3 வருடங்களே ஆகும். மேலும், ஜி.எஸ் ஜயதிலக்கவுக்கு 1198 கோடி ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

399 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.