காட்டில் காணாமல் போன நபர் : வெகுநேரம் குறைத்துக் கொண்டிருந்த நாய் : இறுதியில் நடந்த இன்ப அதிர்ச்சி!!

446

கர்நாடகாவில்..

காட்டுப் பகுதியில் காணாமல் சென்ற நபரை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அவர் வளர்த்த செல்லப்பிராணி அவரை கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சரித்தினை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள சுதுரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சேகரப்பா(55). இவர் தினமும் காட்டிற்கு சென்று விறகு எடுத்துவருவதை வழக்கமாக கொண்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த லையையும் செய்து வந்துள்ளார்.

காலை 6 மணிக்கு காட்டுக்கு செல்லும் இவர் 10 மணிக்கு வீடு திருப்பிவிட்டு, பின்பு ஹொட்டல் ஒன்றில் வேலையும் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று விறகு எடுக்க சென்ற நபர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் உறவினர்கள் காட்டுக்குள் பல இடங்களில் தேடியும் சேகரப்பா கிடைக்காமல் இருந்ததால் உறவினர்கள் சோகத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் சேகரப்பா வளர்த்து வந்த செல்லப் பிராணியான டாமி,

காட்டுக்குள் ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு குரைத்துக் கொண்டிருந்ததைக் கேட்ட உறவினர்கள், அங்கு சென்று பார்த்த போது சேகரப்பா மரத்தின் அடியில் மயங்கியபடி கிடந்துள்ளார்.

அதிக வெப்பம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அவரை மீட்டு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்து சிகிச்சை பெற்று பின்பு நலமுடன் வீடு திரும்பியுள்ளார். தனது மோப்ப சக்தியை வைத்து எஜமானின் உயிரைக் காப்பாற்றிய குறித்த நாயை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.