வவுனியா கிறிஸ்து அரசர் ஆலய பெருவிழா!!

473


கிறிஸ்து அரசர் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா..வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழா இன்று (20.11.2022) ஆலயத்தின் பங்குத் தந்தை தலைமையில் இடம்பெற்றது.கடந்த வியாழக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவின் தவநாள் வழிபாடுகள் இடம்பெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கிறிஸ்து அரசனின் திருச்சொரூபம் ஆலய பின்வாயில் வழியாக புகையிரத நிலைய வீதி வழியாக குருமன்காட்டு சந்தி மன்னார் வீதியூடாக பிரதான வாயிலாக ஆலயத்தை மீண்டும் வந்தடைந்து புனிதரின் இறுதி ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றது.


இப்பெருவிழா நிகழ்வுகளை அமலமரித் தியாகிகள் சபை அருட்பணியாளர் ரமேஷ் ஒழுங்கமைத்து மேற்கொண்டார். கூட்டுத் திருப்பலி அருட்பணி செல்வராஜ் அருட்பணி கமலநாதன் உதவிப்பங்குத் தந்தை ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர். அருட்சகோதரிகள், ஆலய பங்குமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.