கும்கி இயக்குனரின் ஆசை நிறைவேறியது!!

475

Kumki

மைனா, கும்கி என இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்தவர் பிரபு சாலமன்.இவர் தற்போது கயல் என்ற திரைப்படத்தை புதுமுக நடிகர்களை வைத்து உருவாக்கி வருகிறார்.

கயல் திரைப்படத்தின் படபிடிப்பு முடிந்து விட்டது, படபிடிப்பை முடித்த மகிழ்ச்சியோடு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இன்று யாத்திரை பயணம் செல்கிறாராம் இயக்குனர் பிரபு சாலமன்.அவரது பயணம் முடிந்து மே 17 ஆம் தேதி சென்னை திரும்பும் அவர் அடுத்தபடியாக கயல் திரைப்படத்தின் இறுதி கட்டத்தை முடிக்கும் வேலையில் இறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் பிரபு சாலமன் படங்கள் சரிவு நிலையில் காணப்பட்டாலும் கடைசியாக அவர் கொடுத்த மைனா, கும்கி இரண்டு படங்களுமே புதுமையாய் அமைந்திருந்தது,தனது ஆசை நிறைவேறிய நிலையில் யாத்திரை சென்ற பிரபு சாலமனின் கயல் திரைப்படம், மைனா, கும்கி திரைப்பட வரிசையில் அமையுமா?