24 வயதில் பிரபல நடிகையின் உயிரை காவு வாங்கிய மாரடைப்பு : எதனால் ஏற்பட்டது? எச்சரிக்கை செய்தி!!

456


மேற்கு வங்கத்தில்..மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐன்டிரிலா சர்மா பெங்காலி மொழியில் பிரபல நடிகையாக உள்ளார். இவருக்கு சில முறை நெஞ்சு வலி பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டிருக்கிறார்.இந்நிலையில் நேற்று முன் தின இரவு அவருக்கு நெஞ்சுவலி அதிகம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார், அவரின் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு என தெரியவந்துள்ளது.
ஐன்டிரிலாவின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஐன்டிரிலாவுக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கான பின்னணி காரணங்கள் வெளிவந்துள்ளன.


அவர் சில வாரங்களுக்கு முன்பாகத்தான் மூளை பாதிப்பு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, மூளையின் இடப்பக்கத்தில் இரத்தக் கசிவு அதிகம் காணப்பட்டுள்ளது தெரியவந்தது. வாரக் கணக்கில் சிகிச்சை பெற்று வந்த ஐன்டிரிலா பின்னர், பாதிப்பிலிருந்து உடல் நலம் தேறியுள்ளார்.

இதேபோன்று ஐன்டிரிலாவுக்கு 2 முறை புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர் முழுமையாக மீண்டு பின்னர் நடிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது.


தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை, அதிக மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவைகளால் தான் இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.