சீன விமானப்படைக்கு உதவும் குரங்குகள்!!

301

Monkey

விமான தளத்தை பாதுகாப்பதற்காக சீனா விமானப்படை குரங்குகள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. பறவைகள் மூலம் விமானங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கவனித்து கொள்ள குரங்குகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சீனா விமானப்படை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குரங்குகள் அருகில் உள்ள மரங்களில் உள்ள கூடுகளை அழிக்க கற்று வருகின்றன.

விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும்போது, மேலே செல்லும் போதும் தொல்லை ஏற்படுத்தும் பறவைகளை துரத்த குரங்குகளுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வெடிகள் வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் பல நடவடிக்கைகளை எடுத்தும் எந்த பலனும் இல்லை என்பதால் சீனா ராணுவம் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.