காதல் தோல்வியால் நடந்த பரிதாபம் : சினிமா ஒளிப்பதிவாளர் எடுத்த விபரீத முடிவு!!

341


சென்னையில்..சென்னை, மாங்காடு பகுதியில், காதல் தோல்வியில், சினிமா ஒளிப்பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சென்னை, போரூர் , மதனந்தபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் விக்னேஷ்(22). இவர், சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், விக்னேஷ் நேற்று இரவு வீட்டில் இருந்தபோது, ஒரு அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் கிடைத்து, மாங்காடு போலீசார் விரைந்து வந்து, விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் விக்னேஷ் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், விக்னேஷ் அந்த பகுதியில் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.


ஆனால், அந்த பெண் திடீரென , விக்னேஷின் காதலை வெறுத்ததாக தெரிகிறது. காதல் தோல்வியால் மன விரக்தியில் இருந்து வந்த விக்னேஷ் தற்கொலை செய்துக்கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்காலிக பிரச்சினையை தாண்டி செல்லாமல் திடீரென தற்கொலை செய்துகொள்பவர்களால் அவர்களது குடும்பம் தீரா துயரத்தில் மடிந்து விடுகிறது.


அண்மையில், சென்னை வடபழனி பகுதியில் செல்போனை பிடுங்கி வைத்ததால் எட்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்கொலை குறித்து எத்தனையோ விழிப்புணர்வு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகவே இருக்கிறது.