விடுதியில் தங்கியிருந்த தம்பதி… திறக்காத விடுதி கதவு.. கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

5344


பழனியில்..கேரள மாநிலம் எர்ணாகுளம் பல்லுருத்தியை சேர்ந்தவர் ரகு- உஷா தம்பதியினர். இவர்கள் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துளனர். தம்பதியினர் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.இந்நிலையில் நீண்ட நேரமாக கேரள தம்பதி தங்கியிருந்த அறையின் கதவு திறக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் பழனி அடிவாரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.சந்தேகத்தின் பேரில் போலீஸார் அறை கதவை உடைத்து பார்த்தனர்.


அப்போது தம்பதி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். அறையை சோதனை செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியுள்ளது.

கடிதத்தை கைப்பற்றிய போலீஸார் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.


போலீஸார் கைப்பற்றிய கடிதத்தில் கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனையை அதே ஊரை சேர்ந்த சிலர் பெரிதுபடுத்தவதாக கூறி அவர்கள் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.