வவுனியா நகரில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது!!.

1518


3 பெண்கள் கைது..வவுனியா நகர்ப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பெண்களை வவுனியா பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நகர்ப்பகுதியில் நேற்று சோதனைகளை மேற்கொண்ட வவுனியா போதை ஒழிப்பு பொலிசார் விபசார தொழிலில் ஈடுபட முயற்சித்த ஓர் குற்றச்சாட்டில் 3 பெண்களை கைது செய்துள்ளனர்.
செட்டிகுளம், கிளிநொச்சி, காலி ஆகிய பகுதிகளை சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நூறு ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.