கோபத்தில் ரசிகரின் செல்போனை தட்டி விட்ட கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு ரூ. 2 கோடி அபராதம்!!

200

ரொனால்டோ..

ரசிகரின் செல்போனை கோபத்தில் தட்டிவிட்டதற்காக கால்பந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு £50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம்வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ரியல் மாட்ரிட், யுவெண்டஸ் போன்ற அணிகளுக்காக விளையாடிய ரொனால்டோ கடந்த ஆண்டுதான் மான்செஸ்டர் அணியில் இணைந்தார்.

இந்நிலையில் மான்செஸ்டர் அணியின் பயிற்சியாளருக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி நடந்த கால்பந்து போட்டியில் ரொனால்டோ சார்ந்திருந்த அணி தோல்வியடைந்த நிலையில் கோபத்தில் இருந்த அவர் ஆட்டிசம் பாதிக்கப்பட்டிருந்த இளம் வயது ரசிகரின் செல்போனை கீழே தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

இதையடுத்து ரொனால்டோவின் செயலுக்கு £50,000 (ரூ.2,18,87,123.84) அபராதம் விதிக்கப்படுவதோடு 2 கிளப் போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு FA விதி E3ஐ மீறியதற்காக அவரது நடத்தை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.