ஹட்டன் குயில்வத்த தோட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 07.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
புஸ்பநாதன் சாரதா என்ற சிறுமியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சிறுமி குயில்வத்த தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்று வருகிறார்.
சிறுமியின் சடலம் வட்டவலை வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, தற்கொலை செய்து கொன்டமைக்கான காரணம் இதுவரையிலும் தெரியவரவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.