தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் கைவிடப்பட்டிருப்பதாக தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது..
இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் நிலை கொண்ட காலம் முதல் தமிழகத்துக்கு இடம் பெயர்ந்து வந்த இலங்கை தமிழர்கள் கடந்த 30 வருடங்களாக தமிழகத்தில் அகதிகளாகவே வாழ்கின்றனர்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர்களுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த போதும் அவர்களின் எதிர்பார்ப்பும் கனவும் நிராசையாகவே போகிறது.
மேலும் இலங்கை தமிழர்கள் ஆங்கில மொழி அறிவு உள்ளிட்ட பல்வேறு திறமைகளை கொண்டிருக்கின்ற போதும், இன்னும் அவர்கள் கூலித் தொழிலாளர்களாக பணியாற்ற வேண்டிய நிலை காணப்படுகிறது என அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த முறையும் தமிழகத்தின் வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களுக்கான எந்த முன்னேற்ற அறிவிப்புகளும் இல்லை என தெரிவித்துள்ளது.