கம்பஹா ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 26 வயதான குறித்த இளைஞர் நேற்று இரவு 9.00 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர் யக்கல – பிடுவல்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.