மகளின் முன்னிலையில் இளம் தாயை கொடூரமாக கொலை செய்த தந்தை!!

462


குருணாகலில்..குருணாகலில் பாடசாலைக்கு அருகில் வைத்து பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொல்பித்திகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்தங்வெவ யாபஹுவ வீதியில்,தல்பத்வெவ பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 32 வயதான ஜமினி தினுஷிகா மதுஷானி தென்னகோன் என்ற பெண்னே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் நேற்று காலை தல்பத்வெவ மகா வித்தியாலயத்திற்கு தனது மகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற வேளையில் கணவனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.


வீதியில் கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய போது, கணவர் கூரிய ஆயுதத்தால் பெண்ணின் முகம், கழுத்து மற்றும் தலை ஆகிய பகுதிகளில் தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று காலை 07.15 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்க்க முயன்றனர்.


எனினும் அதிக இரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்துள்ளார். மனைவியை கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்ததுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.