கத்தார் உலகக்கோப்பையில் முன்னாள் சாம்பியனை திணறடித்த தென் கொரியா!!

82


தென் கொரியா..உருகுவே மற்றும் தென் கொரியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.கத்தாரின் Education City மைதானத்தில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான உருகுவே அணியும், தென் கொரிய அணியும் மோதின.
சம பலத்துடன் இரு அணிகளும் மோதியதில் முதல் பாதி கோல் இன்றி முடிந்தது. அதேபோல் இரண்டாம் பாதியில் உருகுவே அணி எடுத்த கோல் முயற்சிகளுக்கு தென் கொரியா முட்டுக்கட்டை போட்டது.


இறுதிவரை இரண்டு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. உருகுவே அணிக்கு 4 கார்னர் வாய்ப்புகளும், தென் கொரியா அணிக்கு 3 கார்னர் வாய்ப்புகளும் கிடைத்தன.

இரு அணிகளிலும் தலா ஒரு வீரருக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டது. உருகுவே அடித்த ஒரு கோல் ஆஃப்சைடு ஆனது.


உருகுவே அணி 1930 மற்றும் 1950 ஆண்டுகளில் இரண்டு உலகக்கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.