வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இரு மாணவிகள் 9A சித்தி!!

680


சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில்..க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியான நிலையில் அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இரு மாணவிகள் 9ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.பாடசாலையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2 மாணவிகள் 9A சித்திகளையும், 2 மாணவிகள் 8A B சித்தியினையும், 4மாணவிகள் 7A,B,C சித்தியினையும் 1 மாணவி 7A,B,S சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.