வவுனியாவில் கால்நடைகளால் அதிகரிக்கும் விபத்துக்கள்!!

284

1 2

வவுனியா மாவட்டத்தில் கால்நடைகளால் விபத்துக்கள் அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்நடை வளர்ப்பாளர்கள் தற்போது விவசாய செய்கைகள் நிறைவு பெற்றுள்ளமையால், வியல் நிலங்களில் கால்நடைகளை மேச்சலுக்காக விடுகின்ற போதிலும், அவை சில மணி நேரத்தில் வீதிகளில் வந்து நிற்பதாலேயே இவ் விபத்துக்கள் ஏற்படுகின்றது.

அத்துடன் வீதிகளில் நிற்கும் கால்நடைகளை உரிமையாளர்கள் பராமரிக்காமையால் அவை வாகனங்களில் மோதுண்டு இறக்கும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதுடன் வீதிக்கு குறுக்காக செல்லும் போது மோட்டார் சைக்கிள் மற்றும் பாரிய வாகனங்களில் மோதுண்டு பொது மக்களுக்கும் காயம் ஏற்படும் வகையிலான விபத்துக்கு காரணமாகி விடுகின்றன.

எனவே கால்நடை வளர்ப்பாளர்கள் கால்நடைகளை வீடுகளில் வைத்து வளர்க்க வேண்டும் என உள்ளுராட்சி மன்றங்கள் அறிவித்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.