வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் மக்கள் வங்கியின் தன்னியக்க வங்கி சேவை அலகு திறந்துவைப்பு!!

477


பல்கலைக்கழக வளாகத்தில்..வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் மக்கள் வங்கியின் தன்னியக்க வங்கி சேவை அலகு திறந்து வைக்கும் வைபவம் இடம்பெற்றிருந்தது.வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் மற்றும் மக்கள் வங்கியின் உதவி பொது முகாமையாளர் ஆர்.ரவிகரன் ஆகியோர் இணைந்து தன்னியக்க வங்கி சேவை அலகு நிலையத்தினை திறந்து வைத்திருந்தனர்.
துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் தன்னியக்க வங்கி சேவையில் பணத்தினை வைப்பிலிட்டு அதன் சேவையினை ஆரம்பித்து வைத்திருந்தார். இந் நிகழ்வில் வங்கி ஊழியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.