கிளிநொச்சியில் ஐவர் கைது!!

497

A6

கிளிநொச்சி – கல்மடுகுளம் பகுதி காட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டிக்கொண்டிருந்த ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களால் வெட்டப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் மரம் வெட்டும் உபகரணங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.