வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் : மக்கள் சிரமம்!!

698

பணிப்புறக்கணிப்பில்..

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (29.11.2022) காலை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் தாக்கிய நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுப்பதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல இலங்கை போக்குவரத்து சபையின் சாலைகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையுடன் வவுனியா சாலையினரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையுடன் பேரூந்துகள் இன்றி பேரூந்து தரிப்பிடங்களில் பல மணிநேரம் காத்திருக்கிற நிலமையும் காணப்பட்டது.