வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியின் வரலாற்றில் க.பொ.த சாதாரண தரத்தில் 9A வரலாற்று சாதனை !!

918

வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட  நெடுங்கேணி கல்விகொட்டத்தின் கீழ் அமைந்துள்ள  புளியங்குளம் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற  க.பொ.த. (சா.தர)ப் பரீட்சை – 2021 இல் 9A பெறுபேற்றினைப் பெற்று பாடசாலைக் காலத்தினுள் வரலாற்றுச் சாதனை படைத்த மாணவன் செல்வன் சுதாகரன் டினோஜன் அவர்களைப் பாராட்டி  கௌரவிக்கும் நிகழ்வு இன்று  29.11.2022  நடைபெற்றது.

பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வின்போது  பாடசாலை சமூகத்தினரால் குறித்த மாணவன்  மற்றும் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இறுதியில் பெற்றோர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்கள், மற்றும் வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் பாடசாலை சமூகத்தினரால் பகிரப்பட்டது.