வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்த 9 வயதுச் சிறுவன்!!

324

கர்நாடகாவில்..

கர்நாடகாவில், வீட்டில் நுழைந்த சாரைப்பாம்பை 9 வயது சிறுவன் பிடித்து அதை டப்பாவில் அடைத்த வீடியோ வைரலாகி வருகிறது. ‘இளம் கன்று பயமறியாது’ என்று ஒரு பழமொழி உண்டு.

இந்த பழமொழிக்கு ஏற்றார்போல் 9 வயது சிறுவன் செய்த ஒரு சம்பவம் பெரியவர்கள் உட்பட அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் குணிகல் நகரைச் சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் மகந்தேஸ்.

இவரது மகன் சம்ரட். 9 வயதாகும் சிறுவனுக்கு அவரது தந்தை மகந்தேஸ் பாம்புகளை எப்படிப் பிடிப்பது என்பது பற்றி அவ்வப்போது கற்றுக்கொடுத்து வந்துள்ளார். மேலும் சில நேரங்களில் பயிற்சியும் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் சம்ரட் தெருவில் உள்ள வீட்டு ஒன்றில் பாம்பு புகுந்துள்ளது. இது குறித்து சிறுவனுக்குத் தகவல் வந்துள்ளது. அப்போது அவரது தந்தை வீட்டில் இல்லாததால் சிறுவன் பயம் இன்றி பாம்மை பிடிப்பதற்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்குச் சென்று பார்த்தபோது வீட்டிற்குள் புகுந்தது சாரைப் பாம்பு என்று தெரிந்தது. பிறகு இது பற்றி தந்தையிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவரது தந்தையும் அங்கு வந்துள்ளார்.

இதையடுத்து சாரைப்பாம்பு என்பதால் பயமின்றி மகனைப் பிடிக்கும் படி கூறியுள்ளார். பிறகு சிறுவனும் உற்சாகத்துடன் எவ்விதமான பயமும் இன்றி சாரை பாம்பைப் பிடித்துத் தகரப் பெட்டியில் அடைத்துள்ளார்.

சிறுவனின் அச்சமில்லாத இந்த செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.