வவுனியா வைத்தியசாலையில் ஐந்து மாதங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் இளையனுக்கு உதவிய புலம் பெயர் வாழ் சோபியா நாதன் குடும்பம்!!(படங்கள்)

369

கரிபட்ட முறிப்பு மாங்குளத்தில் வசித்து யுத்தம் காரணமாக 1997.07.27இல் இடம் பெயர்ந்து யங்கறாவூர் நலன்புரி முகாமில் இருந்து தாலிக்குளம் பூவரசங்குளத்தில் மீள் குடியேற்றம் செய்யபட்ட விமலலோஜினி குடும்பம் மிகவும் வறிய குடும்பம்

கணவன் பிரிந்து சென்றுவிட இரு ஆண் பிள்ளைகளுடன் மிகவும் வறிய நிலையில் தனது பிள்ளைகளான அனுசன் ,ராகவனை வளர்த்து வந்தார்

இந்த நிலையில் தாயாரின் நிலையை கருத்தில் கொண்டு மில் வேலைக்கு சென்ற ராகவன் 2013 .12.23 திகதி அன்று தவறுதாலாக எரியும் உமியில் விழுந்து இடுப்புக்கு கீழ் பொசுங்கிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்

மேலும் இவரின் உயிரை காப்பாற்ற இரு ஊசிகள் போட வேண்டும் என்றும் ஒன்றின் பெறுமதி 45000 ரூபா என்றும் வைத்தியர்கள் தெரிவிக்க மிகவும் வறிய நிலையில் இருந்த ராகவனுக்கு 90000 செலவில் இரு ஊசிகளையும் 2013 இல் தன் செலவில் ராகவன் வேலை செய்த மில் உரிமையாளர் பணம் கொடுத்து போடு வித்துள்ளார்.

ஊடகங்கள் எதிலும் இவர் சம்மந்த பட்ட செய்திகள் வராத நிலையில் 5 மாதங்களாக தாயார் விமலலோஜினி மிகவும் கஷ்ட பட்டு பாரமரித்து வந்துள்ளார். வைத்தியசாலையில் இருந்து தாலிக்குளத்துக்கு பஸ்ஸில் செல்ல கூட பணம் இல்லாது இருந்த நிலையில் தாலிக்குளம் மீள் எழுச்சி அலுவலர் ஜெயசித்திரா, மீள் எழுச்சி கிராம தலைவர் அந்தோணி பிள்ளை (பாலன் ) தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்புக்கு அவர்களின் நிலை பற்றி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, புலம் பெயர் வாழ் சோபியா நாதன் மூலம் ஒரு தொகை பணமும், ஒரு மாதத்துக்கு தேவையான உலர் உணவு பொருட்களும் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ), மாணிக்கம் ஜெகன் ,வவுனியா வைத்தியசாலை நலன்புரி சங்க தலைவர் சிவஞானம் ஆகியோர் வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் அகிலன் அனுமதியுடன் 07.05.2014 காலை வழங்கியிருந்தனர்

தாயார் விமலலோஜினியிடம் வைத்தியசாலையில் வைத்து இந்த உதவியை வழங்கினர். தனக்கு ஐந்து மாதங்களுக்கு பிறகு மகனின் நிலையை கருத்தில் கொண்டு முதன் முதலாக நீங்கள் தான் உதவினீர்கள் என்று தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்புக்கும் உதவி புரிந்த சோபியா நாதன் குடும்பத்துக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார் .

1 2 3 4 5 6