எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறியழுத கணவன்!!

399

ஒரிசாவில்..

நொடி பொழுது சலனம் தான்… எல்லா குற்றத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது. தற்கொலை எந்த பிரச்சனைக்குமே தீர்வாகாது. உங்களுக்கு பிரியமானவர்களிடம் மனம் விட்டு பேசுங்க.. எல்லா பிரச்சனைகளுக்குமே தீர்வு உண்டு.

விரல் நுனியில் சாத்தானாய் எல்லோர் வீட்டிலும் செல்போன்கள் ஆக்கிரமித்து இருக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது பிடியில்லாத கத்தியைப் போல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம்… கெட்ட காரியங்களுக்கும் பயன்படுத்தலாம்.

தென்காசியில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் 22 வயசு தான். கனவுகளோட வாழ்க்கையைத் துவங்கிய தம்பதி.

ஒரிசா மாநிலம் இந்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்த தம்பதியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஊரில் இருந்து பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்து உள்ள கரிவலம் வந்தநல்லூர் அருகே வேலாயுதபுரத்தில் வாடகை வீடு எடுத்து இருவரும் தங்கி இருந்தனர்.

அஜய்குமார் மாண்டல் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் கூலி தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

அதன்படி வேலைக்கு சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பிய அஜய்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் அவரது மனைவி ஸ்ரீதனா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதைக் கண்டு அவர் கதறி அழுதார்.

பின்னர் ஸ்ரீதனாவின் மரணம் குறித்து உடனடியாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஸ்ரீதனா மாஞ்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அஜய்குமார் மாண்டல் கூலிவேலைக்கு சென்றதும் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதனா மாஞ்சி தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதில் அவர் ரூ.70 ஆயிரம் வரை இழந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது ஆன்லைனில் ரம்மி விளையாடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.  ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.