சண்டையிட்டால் தலையில் குத்துவேன் என பொலார்ட்டை மிரட்டிய கெய்ல்!!(வீடியோ)

522

Pollard

மும்பை- பெங்களூர் போட்டிகளின் போது மோதலில் ஈடுபட்ட பொலார்டிடம் தலையில் குத்துவேன் எனக்கூறி கெய்ல் அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.

ஐ.பி.எல். போட்டியில் கடந்த 6ம் திகதி மும்பையில் நடந்த ஆட்டத்தில் றொயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி வேகப்பந்து வீரர் ஸ்டார்க், மும்பை அணியின் துடுப்பாட்டக்காரர் பொலார்டு, ஆடுகளத்தில் மோதிக் கொண்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

போலார்ட்டை நோக்கி ஆத்திரத்தில் ஸ்டார்க் பந்தை எறியும் விதமாக வீசினார். பதிலுக்கு பொலார்டு துடுப்பை வேகமாக வீசினார். நல்ல வேளையாக துடுப்பு தரையில் விழுந்தது.

ஸ்டார்க் – பொலார்டு மோதலின் போது பெங்களூர் அணியில் விளையாடும் மேற்கிந்திய அணியின் கிறிஸ் கெய்ல் தனது நாட்டை சேர்ந்த பொலார்டை சமாதானம் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ஆட்டத்தில் ஏற்பட்ட தீவிரம் காரணமாக இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. மோதலின் போது நான் பொலார்டு அருகே வந்து உனது தலையில் குத்துவேன் என்று கூறினேன். பிறகு அவர் அமைதியானர்.

பெங்களூர் அணி தற்போது பின் தங்கிய நிலையில்தான் இருக்கிறது. ஆனால், வாய்ப்பை இழந்து விடவில்லை. இனிவரும் ஆட்டங்களில் நன்றாக விளையாடுவோம். டிவில்லியர்சின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. நாங்கள் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முன்னேறுவோம் என்று கூறியுள்ளார்.