எவ்வளவோ சொல்லியும் கேட்காத கணவனை 22 துண்டுகளாக்கி வீசியெறிந்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

511

டெல்லியில்..

எவ்வளவோ சொல்லியும் கேட்கலை.. பலமுறை இது குறித்து இருவருக்குள்ளும் பிரச்சனைகள் வெடித்திருக்கிறது. இருந்தாலும் தனது கள்ளத்தொடர்பை அவர் விட தயாராக இல்லை. எனக்கும் வேற வழி தெரியலை… என அதிர வைத்திருக்கிறார் பூனம். அப்படி என்ன செய்தார்?

தனது கணவனைக் கொன்று, 22 துண்டுகளாக கூறு போட்டிருக்கிறார். அதன் பிறகு பாகங்களை ப்ரிட்ஜில் அடுக்கி வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி வீசி எறிந்திருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தாவை அவளது காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்த அதிர்ச்சி சுவடு கூட இன்னும் மறையலை. அதற்குள் அடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. உத்தரப்பிரதேசத்தில், தனது காதலியை 5 துண்டுகளாக்கி வெவ்வேறு இடங்களில் காதலன் வீசி எறிந்த சம்பவமும் நடந்தேறியது.

இந்நிலையில், அதே பாணியில் தலைநகரில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை தனது மகனுடன் சேர்ந்து மனைவி, கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் பாண்டவ நகர் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சன்தாஸ். இவரது மனைவி பூனம். இவர்களுடைய மகன் தீபக் . இதில் அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்து வந்தது. இதனை அவரது மனைவி பூனம் பலமுறை சொல்லியும்,கண்டித்தும் அவர் திருந்தவில்லை.

இதனால் பூனம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்தார். கடந்த ஜூன் மாதத்தில் கணவரை கொலை செய்து மகன் உதவியுடன் அவரின் உடலை 22 பாகங்களாக வெட்டினார்.

வெட்டப்பட்ட உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்து தினமும் டெல்லியை சுற்றி பிரித்து வீசியுள்ளார். வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகியுள்ளது.

அவருடன் அவரது தாயாரும் செல்வது அதில் தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை சிதைந்த நிலையில் கண்டுபிடித்தனர்.

தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டவைகளில் சில தாசின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது . இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு து பூனம், தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.