கடலுக்கடியில் அதிவேக ரயில்ப் பாதை அமைக்கும் சீனா!!

259

C1 C2

சீனாவிலிருந்து ரஷ்யா ஊடாக அமெரிக்காவுக்கு அதிவேக புல்லட் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 13 ஆயிரம் கிலோமீற்றர் துாரம் தனி ரெயில்பாதை அமைக்க வேண்டி உள்ளது.

வட கிழக்கு சீனாவிலிருந்து, ரஷ்யாவின் கிழக்கு சைபீரியா, பெரிங் ஜலசந்தி, அலாஸ்கா, கனடா வழியாக அமெரிக்கா வரை இந்த பாதை நீளும். இந்த வழித்தடத்தில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 350 கிலோமீற்றர் நீளத்துக்கு சுரங்கப் பாதையும் அமைக்க வேண்டும். இதற்கான திட்டமிடலில் சீனா தீவிரமாக உள்ளது.

இந்த புல்லட் ரெயில் தடம் அமைத்து விட்டால் மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் அதில் புல்லட் ரெயில் செல்லும். வட கிழக்கு சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இரண்டு நாளுக்குள் புல்லட் ரெயிலில் போய்ச் சேர்ந்து விடலாம். இந்த ரெயில் திட்டத்துக்கு சீனா–ரஷ்யா பிளஸ் அமெரிக்கா வழித்தடம் என பெயரிடப்பட்டுள்ளது.