பதின்ம வயதில் வந்த காதல் : 10வருடங்கள் காத்திருப்பு : இலங்கை பிரபலத்தின் சுவாரஸ்ய காதல் கதை!!

1451


சுவாரஸ்ய காதல் கதை..அண்மையில் இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவரான சரித் அசலங்கவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கவிந்தி எனும் ஆங்கில ஆசிரியையை சரித் அசலங்க திருமண முடித்துள்ளார்.இந்நிலையில் 10 ஆண்டுகள் தொடர்ந்த அவர்களின் காதலின் சுவாரஸ்ய சம்பவம் இணையங்களில் வைரலாகிவருகின்றது. அதாவது கடந்த 2012 சரித் அசலங்கவுக்கு 15 வயது கவிந்திக்கு 14 வயது.
காலியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஒரு பேருந்தில் இவர்கள் காதல் ஆரம்பிக்கின்றது. இருவரும் காதலை சொன்ன தினம் 28ம் திகதி நவம்பர் மாதம் 2012. நாம் இருவரும் இளவயதினர் தான்.


ஆனால் வாழ்வில் நாம் எடுத்துக்கொண்ட துறையில் ஜெயித்து பின் திருமணம் செய்து கொள்வோம் என அந்தவயதில் அவர்கள் தமக்குள் உறுதி பூண்கின்றனர்.

விரைவாக 10 வருடங்கள் கடக்க இன்று 2022 இல் அந்த அதே சிறுவன் இன்று இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவனாகியுள்ளார். முதிர்ச்சியும் கிரிக்கட் திறமையும் இளவயதிலேயே கைவரப் பெற்ற சரித் அசலங்க இலங்கை கிரிகெட்டில் முக்கிய வீரர்களில் ஒருவராக உள்ளார்.


அதே 28ம் திகதி நவம்பர் மாதம் தான் திருமணம் இடம்பெறவேண்டும் என்று விடாப்பிடியாக தமது திருமணத்தை இருவரும் நடாத்தி முடித்திருக்கின்றார்கள்.

இந்நிலையில் குணதிலக்கக்கள் உருவாகின்ற சமூகங்களிலிருந்து தான் அசலங்கக்களும் உருவாகின்றார்கள். குணத்திலக்ககளும் அசலங்ககளும் கூடவே வாழ்பவர்களாகவும் ஏன் நண்பர்களாகவும் கூட இருப்பார்கள்.

இருவரையும் வேறுபடுத்துவது திறமையோ, கடின உழைப்போ இல்லை. கொஞ்சம் ஒழுக்கம், நிறைய இலட்சியம் அவ்வளவு தான் என சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.