
மே 4 அன்று பிறந்தவர் நடிகை திரிஷா. தன் 31 ஆவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட எண்ணிய திரிஷா தனக்கு நெருக்கமான நட்சத்திரங்களை அழைத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று திரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நயன்தாரா, அமலாபால், சிம்பு, ரம்யா கிருஷ்ணன், தொலைக்காட்சித் தொகுப்பாளினி ரம்யா உட்பட பல நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.
தன்னுடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு ஹன்சிகாவுக்கும் மறக்காமல் அழைப்பு விடுத்திருந்தார் திரிஷா. கண்டிப்பாக வருவதாக திரிஷாவிடம் உறுதியளித்திருந்தார் ஹன்சிகா. ஆனால், கடைசி நேரத்தில் திரிஷாவின் பார்ட்டிக்கு செல்லும் திட்டத்தை கைவிட்டுவிட்டு கேக் மற்றும் பரிசு பொருட்களை மட்டும் வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார்.
திரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஹன்சிகா செல்லாததற்கு காரணம் சிம்பு பார்ட்டிக்கு சிம்புவும் வருகிறார் என்பதை கேள்விப்பட்டே அங்கே செல்லும் திட்டத்தை கைவிட்டாராம் ஹன்சிகா.
திரிஷாவின் பார்ட்டிக்கு ஹன்சிகா வரவில்லை என்றாலும், நயன்தாரா சரியான நேரத்துக்கு அங்கே ஆஜராகிவிட்டாராம். சற்று நேரத்தில் சிம்புவும் அங்கே வந்து சேர, திரிஷாவின் பிறந்தநாள் பார்ட்டி களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.
சரியாக 12 மணிக்கு திரிஷா கேக் வெட்ட. ஹேப்பி பர்த் டே பாடி முடித்ததும்…சியர்ஸ் சத்தம்தான். நல்ல ஆட்டம் போட்டுவிட்டு நடுராத்திரியில்தான் கிளம்பிப்போனார்களாம் நட்சத்திரங்கள்.





