டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்.. சோகத்தில் இரசிகர்கள்!!

498

இந்தியாவில்..

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கனடாவை சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேஹா தாகூர் (வயது 21) தனது 2வது வயதில் கனடாவில் குடியேறினார். இதனிடையே மேஹா தாகூர் டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் நடனம், இசை உள்ளிட்ட பல்வேறு காணொளிகளை வெளியிட்டு பிரபலமானார்.



டிக்டாக்கில் மேஹாவை சுமார் 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் மேஹா தாகூர் உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் நேற்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேஹா நவம்பர் 24ம் திகதி உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படாத நிலையில் மாரடைப்பு அல்லது கார் விபத்தில் மேஹா தாகூர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.