வவுனியாவில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 143ஆவது நினைவு தினம்!! 

423

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்..

சைவப்புலவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 143ஆவது நினைவுதினம் இன்று (5.12.2022) வவுனியா இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்றது.

அன்னாரின் நினைவு சிறப்பு சொற்பொழிவை தமிழருவி சிவகுமார் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், இலங்கை திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 1997.04.04 அன்று நகரசபை தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.