வவுனியாவில் நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடைபயணம்!!

508


நடைபயணம்..நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.வவுனியா மருத்துவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலை முன்பாக இன்று (07.12.2022) காலை ஆரம்பித்த விழிப்புணர்வு நடை பயணம் கண்டி வீதி ஊடாக வவுனியா நகரை அடைந்து,
இரண்டாம் குறுக்குத்தெரு, கந்தசாமி கோவில் வீதி, பசார் வீதி, மில் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றினுடாக மீண்டும் வவுனியா வைத்தியசாலையை வந்தடைந்தது.


தொற்றா நோயாகிய நீரிழிவு நோயானது தற்போது நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது. வவுனியாவிலும் இந் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மக்களது வாழ்க்கை முறையும், தவறான உணவுப் பழக்க வழக்கமுமே இந்த நோய் ஏற்படுவதற்கு முககிய காரணம் எனவும் இது தொடர்பில் ஆரம்பத்திலேயே விழிப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த விழிப்புணர்வு நடைபயணம் இடம்பெற்றது.


இதில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,

வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பிரிவினர், பொலிசார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், வர்த்த சமூகத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.