நேர்மையாக செயற்பட்ட இலங்கைக் மலசலகூட சுத்திகரிப்பாளருக்கு சன்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் கழிவறை சுத்திகரிப்பாளராக கடமையாற்றி வரும் சமிந்து அமரசிங்க என்பவருக்கே இவ்வாறு சன்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கழிவறைகளை சுத்திகரிப்பதற்காக சென்றிருந்த போது பெரும் எண்ணிக்கையிலான பணத்தை சமிந்து கண்டெடுத்துள்ளார்.
பணத்தை கண்ட சமிந்து உடனடியாக தனது மேலதிகாரிக்கு அறிவித்துள்ளார். மேலதிகாரி பொலிஸாருக்கு அறிவித்து சுமார் 100, 000 டொலர் பணம் மீட்கப்பட்டது.
இந்தப் பணத்திற்கு எவரேனும் உரிமை கோருவார்கள் என காத்திருந்த போதிலும் இதுவரையில் எவரும் பணத்திற்கு உரிமை கோரவில்லை.
அதனை அடுத்து குறித்த பணத்தை நேர்மையாக செயற்பட்ட சமிந்துவிற்கே வழங்கிவிட நியூசிலாந்து நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
சமிந்து தற்போது விரைவு உணவு நிறுவனமொன்றில் பகுதி நேர அடிப்படையில் கடமையாற்றி வருவதுடன், தகவல் தொழில்நுட்பம் பயின்று வருகின்றார்
சமிந்துவிற்கு 81597 டொலர்கள் வழங்கப்படுவதுடன் மிகுது 19500 டொலர்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட உள்ளது. கிடைக்கப் பெற்ற பணத்தை எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என சமிந்து தெரிவித்துள்ளார்.
பிரிவிக்கில் உள்ள பௌத்த விஹாரைக்கும் மாற்று திறனாளிகளுக்கும் உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக சமிந்து தெரிவித்துள்ளார்.