5ம் வகுப்பு மாணவிக்கு செருப்பு மாலை : பேய் போல் மேக்கப் : விடுதியில் நடந்த கொடூரம்!!

1397

மத்திய பிரதேசத்தில்..

ஐந்தாம் வகுப்பு மனைவிக்கு பேய் போல் மேக்கப் போட்டு செருப்பு மாலை அணிவித்து விடுதி வளாகத்தை சுற்றிவர செய்திருக்கிறார் விடுதி காப்பாளர். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் அமைந்துள்ளது அரசு பள்ளி. அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி விடுதியில் தங்கி படித்து வருகின்றார்.

செருப்பு மாலை அணிவித்து, பேய் போல் மேக்கப் போட்டு விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்ததாக விடுதி காப்பாளர் மீது புகார் அளித்துள்ளார் சிறுமியின் தந்தை.

விடுதியில் தங்கி இருந்த மாணவிகளில் ஒருவரின் 400 ரூபாய் பணத்தை அந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி எடுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதனால் விடுதியின் பெண் காப்பாளர், அந்த மாணவியின் முகத்தில் கருப்பு நிற மை பூசி பேய் போல் மேக்கப் போட்டுவிட்டு, செருப்பு மாலை அணிவித்து, விடுதி வளாகத்தை சுற்றிவர செய்திருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து மகளை சந்திப்பதற்காக தந்தை சென்று இருக்கிறார். அப்போது நடந்த கொடூரத்தை பார்த்து அவர் போலீசில் புகார் அளிக்கவும், கல்வி அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு விடுதி காப்பாளரை பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளனர். இது குறித்து மேற்கொண்டு விரிவான விசாரணையும் நடந்து வருகிறது.