காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு இரவு நேரத்தில் இளைஞரால் நேர்ந்த கொடூரம்!!

312

இந்தியாவில்..

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்கு நேர்ந்துள்ள சம்பவம் தொடர்பான செய்தி, தென் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியில் தபஸ்வி என்ற மாணவி ஒருவர் பிடிஎஸ் படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சமூக ஊடகம் மூலமாக ஞானேஸ்வர் என்ற இளைஞருடனும் தபஸ்விக்கு நட்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த தபஸ்வி மற்றும் ஞானேஸ்வர் ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில் தான் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக ஞானேஸ்வருடன் பேசுவதையும், பழகுவதையும் தபஸ்வி நிறுத்தி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தபஸ்வி ஒதுங்கி சென்றாலும் அவருக்கு ஞானேஸ்வர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் காவல் நிலையத்தில், ஞானேஸ்வர் மீது புகார் ஒன்றையும் தபஸ்வி அளித்திருந்தார். இதன் பின்னர் இளைஞரை அழைத்து போலீசார் எச்சரித்தும் அனுப்பி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் பின்னர், குண்டூர் அருகே உள்ள தக்கெல்லப்பட்டு என்ற இடத்தில தனது தோழியுடன் தபஸ்வி கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் தங்கி வந்துள்ளார். அவர் இருக்கும் இடத்தை அறிந்த ஞானேஸ்வர், அங்கே சென்று தபஸ்வியிடம் பேசவும் முயன்றுள்ளார்.

அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் உருவானதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி தபஸ்வியை ஞானேஸ்வர் கொலை செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், ஞானேஸ்வரை தாக்க முயன்ற நிலையில், தனது கையையும் அவர் அறுத்துள்ளார். மறுபக்கம் ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவி தபஸ்வியை மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காதலை கைவிட்டதன் பெயரில் கல்லூரி மாணவியை கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவி உள்ளது.