வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனம் முன்பாக ஒன்று கூடிய மக்களினால் பதற்றநிலை : ஆசிரியர் மீதும் தாக்குதல்!!

2261

தனியார் கல்வி நிறுவனம்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனம் முன்பாக ஒன்று கூடிய மக்களினால் அவ்விடத்தில் 30 நிமிடங்களும்கு மேலாக பதற்றநிலை காணப்பட்டது.

குறித்த தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் ஓர் சில மாணவர்கள் தமக்கு கற்பித்தல் நடவடிக்கை தெளிவில்லை எனவே பிரிதொரு ஆசிரியரை நியமிக்கவும் அல்லது கட்டணத்தினை திருப்பித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு தனியார் கல்வி நிறுவனம் மறுப்பு தெரிவித்த நிலையிலையே பதற்றநிலை உருவாகியிருந்தமையுடன் அவ்விடத்தில் ஒன்று கூடிய சிலர் அங்கு பணிபுரியும் மற்றுமொரு ஆசிரியர் மீதும் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

அதன் பின்னர் குறித்த தனியார் கல்வி நிலையத்தின் நிர்வாகி தலைமறைவாகியதுடன் குறித்த நிலைமை தொடர்பில் கேட்கச்சென்ற ஊடகவியாளர்களையும் சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

விரைவில் இவற்றிற்கு தீர்வு பெற்றுத்தருவதாக தனியார் கல்வி நிலையத்தின் பெண் ஊழியர் வாக்குறுதியளித்தமையினையடுத்து நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.