இலங்கையில் ஏற்பட்டுள்ள மினி சூறாவளி!!

940


மினி சூறாவளி..மாண்டஸ் சூறாவளி தொடர்பில் தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் சூறாவளி அதிதீவிர சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை காலை அதிதீவிர சூறாவளியாகவே மாண்டஸ் கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு சூறாவளியாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் சூறாவளியானது,சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO)எச்சரித்துள்ளது.

பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்தில் வலுவடையும் காலநிலை மாற்றத்தால் இலங்கையின் வட,கிழக்கு பகுதியில் பெரும் சீரற்ற காலநிலை நிலவுவதுடன் சூறாவளி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் இலங்கையின் மலையக பகுதியில் மினி சூறாவளி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, லுணுகல பிரதேச வைத்தியசாலை கட்டடம் ஒன்றில் இந்த மினி சூறாவளியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றின் தாக்கம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.