யாழில் 14 வயது சிறுமியை தாயாக்கிய 73 வயது முதியவர்!!

609


யாழில்..யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என்ற சந்தேகத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.கடந்த திங்கள் கிழமை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அங்கு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். கைது செய்யப்பட்ட முதியவர் சிறுமியின் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன்,
சிறுமியுடன் நெருங்கி பழகியவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக பொலிஸார் தொிவித்துள்ளனர்.