மேற்கு வங்காளத்தில்..
இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள குர்மன் கிராமத்தைச் சேர்த்தவர் கவுர் சந்திரா சான்ட்ரா.
இவரது மகள்களான அர்பிதா – பராமிதா இரட்டை சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரியில் பட்டம் பெறுவது வரை ஒன்றாகவே இருந்துள்ளனர்.
சிறுவயது முதல் ஒன்றாகவே படித்து வளர்ந்ததால், சகோதரிகள் இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளனர். அதனை தங்கள் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். கவுர் சந்திராவும் அவர்களின் விருப்பத்தை மதித்து மணமகன்களை தேடியுள்ளார்.
அப்போது லவ் பாக்ரே மற்றும் குஷ் பாக்ரே என்ற இரட்டை சகோதரர்கள் குறித்து கவுர் சந்திரா அறிந்துள்ளார். உடனடியாக அவர்களின் குடும்பத்தை தொடர்புகொண்ட அவர் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
லவ் – குஷ் சகோதரர்களுக்கும் திருமண வரன் தேடப்பட்டு வந்ததால் அவர்களின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இரட்டை சகோதரிகளை மணக்க வேண்டும் என்று நினைத்த லவ் – குஷ் சகோதரர்களுக்கும், அர்பிதா-பராமிதாவுக்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றது.
திருமணத்தின் போது மணமகன்களும், மணமகள்களும் ஒரே வண்ண உடைகளை அணிந்திருந்தனர். அதுமட்டுமன்றி நகைகளின் வடிவமைப்பு, உடையலங்காரம் என எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தது அனைவர்க்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரட்டை சகோதரர்களை இரட்டை சகோதரரிகள் மணந்த அரிய திருமண நிகழ்வை ஆச்சரியத்துடன் பலரும் கண்டு களித்தனர்.