உலக இளைஞர் மாநாடு நிறைவு : கொழும்பு பிரகடனம் வெளியீடு!!

473

Youth

உலக இளைஞர் மாநாட்டின் நான்காவது தினமான நேற்று (10) கொழும்பு பிரகடனம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

உலக இளைஞர் மாநாட்டின் தலைவர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். 15வது உலக இளைஞர் மாநாடு நேற்றைய தினத் நிறைவு பெற்றுள்ளது.

இளைஞர்களுக்கான உரிமைகள், சமத்துவமின்மையை குறைத்தல், பால் நிலை சமத்துவம், தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்பு, வறுமையை குறைத்தல், உணவு பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, சமாதானத்தை உணர்தல், நல்லிணக்கம், வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இளைஞர் மாநாட்டில் பேசப்பட்டது.

உலக இளைஞர் மாநாட்டில் 168 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 26 நாடுகளின் இளைஞர் விவகாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் 60க்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளும் 100க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உயர் அதிகாரிகளும் மாநாட்டில் பங்கேற்றனர். கொழும்பு பிரகடனம் இவ்வருடம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதுவரை காலம் நடைபெற்ற உலக இளைஞர் மாநாடுகளில் கொள்ளை வகுப்பாளர்களினால் ஒரு பிரகடனமும் இளைஞர்களினால் ஒரு பிரகடனமுமாக தனித்தனியே பிரகடனங்கள் வெளியிடப்பட்டன.

இதனால் அவை இரு துருவங்களாக செயற்படுத்த முடியாத ஆவணங்களாக கிடப்பில் போடப்பட்டன. ஆனால் இந்த உலக இளைஞர் மாநாட்டில் கலாநிதி பாலித்த கொஹொனவின் தலைமையில் கொள்கை வகுப்பாளர்கள் இளைஞர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.​