வவுனியாவில் பிரதான வீதியின் குறுக்கே வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!

788


சீரற்ற காலநிலை..வவுனியா மாவட்டத்தில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக செட்டிக்குளம் – பூவரசங்குளம் பிரதான வீதியின் குறுக்கே மரம் வீழ்ந்தமையினால் அப்பாதையூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது.பூவரங்குளம் தட்டாங்குளம் பகுதியிலேயே இம் மரம் முறிந்து வீழ்ந்திருந்தமையுடன் பல மணிநேரமாக இவ்வீதியூடான போக்குவரத்து பாதிப்படைந்தமையுடன்,
பிரதேச சபையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வீதியில் வீழ்ந்திருந்த மரம் அகற்றப்பட்டமையுடன் அப்பகுதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியிருந்தது.


மேலும் வவுனியா நகரிலுள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்திற்கு முன்பாகவிருந்த மரமொன்றும் வீழ்ந்தமையினால் மரத்தின் கீழ் நின்ற மோட்டார் சைக்கிலொன்றும் பகுதியளவில் சேதமடைந்திருந்தது.