சந்திரனில் குடியேற ஆசையா?

271

Moon

2030ஆம் ஆண்டில் சந்திரனில் மனிதர்களை குடியேற்றவும் அங்கு குடியிருப்புகளை அமைக்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதற்கான குடியிருப்பை அமைப்பதற்கான பணியில் அந்நாடு ஈடுபட்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலகட்டதிற்குள்ளாக மனிதர்களை சந்திரனில் தங்கவைக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயராக இருக்குமென தெரிகிறது.

இதற்கான முதல்கட்ட பணிகளுக்கு 28.5 பில்லியன் ரூபிள் (815.8 மில்லியன் டொலர்) செலவாகும் என்றும் அங்கு குடியிருப்பை அமைப்பதன் மூலம் அரிதான மற்றும் மதிப்பு மிக்க தாதுக்களை கண்டறிதல் மற்றும் எதிர்கால விண்வெளி பணிகான ஏவுதளம் நிறுவுதல் போன்றவைகளுக்கு இது வழிவகுக்கும் என்று ரஷ்ய விஞ்ஞானி இவான் மோசியேவ் தெரிவித்துள்ளார்.