குள்ளமாக இருப்பவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

756

Short

அமெரிக்காவில் உள்ள ஹவாய் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பிரட்லி வில்காஸ் தலைமையிலான குழுவினர் ஜப்பானியர்கள் மற்றும் குள்ளமான மனிதர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் உயரமான மனிதர்களை விட குள்ளமானவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வார்கள் என கண்டறியப்பட்டது.

குள்ளமானவர்களின் உடலில் ஓடும் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைந்த அளவில் உள்ளது. இதனால் நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுவதில்லை. மேலும் இவர்களுக்கு புற்றுநோய் தாக்குதலும் குறைவாக உள்ளது.

ஆயுள் குறித்த மரபணு (எப்.ஓ.எக்ஸ்.ஓ.3) உடல் அளவுடன் தொடர்புடையதாக உள்ளது. உடல் அளவே மனிதனை மட்டுமின்றி மற்ற உயிரினங்களின் ஆயுளையும் நிர்ணயிக்கிறது. இந்த தகவலை பேராசிரியர் டாக்டர் பிரட்லி வில்காஸ் கூறியுள்ளார்.