பூ.கவிதாசன்..

யாழ். வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (10.12.2022) இடம்பெற்றுள்ளது. நெல்லியடி திருமகள் சோதி வீதியைச் சேர்ந்த பூ.கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வல்லை பகுதியில் வாகனம் ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார்.





