தமிழரை காதலித்து மணந்த வெளிநாட்டு பெண்! பட்டு சேலையில் வளைகாப்பு நிகழ்ச்சி!!

970

அமெரிக்காவில்..

தமிழ் மொழி மீது கொண்ட காதலால் தமிழரை மணந்து பிரபலமான வெளிநாட்டு பெண் தனது வளைகாப்பு புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியை சேர்ந்தவர் சமந்தா ஜோஸ். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்திருந்தாலும் கூட, தமிழ் மொழியின் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுள்ளது.

அதன் விளைவாக யுடியூப் வாயிலாக தமிழ் மொழியை கற்க ஆரம்பித்துள்ளார். இதையடுத்து டுவிட்டரில் தங்கிலீஷில் தமிழ் மக்களிடம் பேசி தனது தமிழ் திறமையை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கண்ணன் என்ற தமிழ் இளைஞரை மணமுடிக்க உள்ளதாக கடந்த 2019ல் தெரிவித்த நிலையில் அதே ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது.

சமந்தா கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து அவருக்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பட்டு சேலையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து பலரும் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.