ரயில் தாமத பிரச்சினைக்கு இன்று தீர்வு!!

702

Train

இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் ரயில் தாமதம் பிரச்சினை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

தமது சட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இன்றைய பேச்சுவார்த்தையில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக இலங்கை லொக்கோமொட்சி ஒபரேட்டின் பொறியியல் சங்க செயலாளர் கே.ஏ.யூ.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பொத்துஹெர மற்றும் அளுத்கம பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்துக்களை அடுத்து ரயில் ஓட்டுநர்கள் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதால் ரயில் பயணங்கள் தாமதமடைந்துள்ளன. இதனால் ஆத்திரமுற்ற பயணிகள் ரயில் ஓட்டுநர்கள் இருவரை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.