பேருவளை..
பேருவளை, பந்தனாகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (13.12.2022) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பந்தனாகொட பிரதேசத்தில் அருகில் பலா மரத்தில் மோதியுள்ளது. உயிரிழந்தவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் பராமரிப்புப் பிரிவில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றிய திருமணமாகாத 41 வயதுடைய கெமுனு மங்கள ஜயரத்ன என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் பணி முடிந்து தனது நண்பரை வீட்டில் விட்டு வரச் செல்லும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. அத்துடன், விபத்தில் நண்பரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார். விபத்து நடந்த பகுதி மிகவும் வளைவுகள் நிறைந்த பகுதியாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.